ஜடேஜா இன்ஸ்டாகிராமில் ஒலித்த எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை பாடல்.. ரசிகர்கள் கொண்டாட்டம்

ஜடேஜாவுக்கு தமிழ் பாட்டு மிகவும் பிடிக்கும் என்று அஸ்வின் ஒரு வீடியோவில் கூறியிருந்தார்.சென்னையில் நடந்த போட்டி ஒன்றில் ஜடேஜா மைதானத்தில் இருந்த போது DJ அந்த பாட்டை போட்டு அவரை மகிழ்வித்தார்.
ஜடேஜா இன்ஸ்டாகிராமில் ஒலித்த எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை பாடல்.. ரசிகர்கள் கொண்டாட்டம்
Published on

2-வது உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் ஓவலில் வருகிற 7-ந்தேதி (மாலை 3மணி) தொடங்குகிறது. இதனையொட்டி இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை வெல்லுவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் ஜடேஜா. அவர் லண்டனில் டெஸ்ட் போட்டிக்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

அவர் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவருக்கு ஒரு தமிழ் பாட்டு மிகவும் பிடிக்கும் என்று இந்திய கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான அஸ்வின் சமீபத்தில் வெளியிட்ட வீடியோவில் கூறியிருந்தார். ஜடேஜாவுக்கு வானத்தைப் போல படத்தில் இடம் பெற்ற 'எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை' என்ற பாடல் மிகவும் பிடிக்கும் என்று 'நானும் அவரும் ஜிம்மில் வொர்க் அவுட் பண்ணும் போது அவர் அந்த பாட்டை தான் போட்டு கேட்பார்' என்றும் தெரிவித்து இருந்தார்.


இதனையடுத்து சென்னையில் நடந்த போட்டி ஒன்றில் ஜடேஜா மைதானத்தில் இருந்த போது DJ அந்த பாட்டை போட்டு அவரை மகிழ்வித்தார்.

இந்நிலையில் நேற்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை பாடலை பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த சென்னை ரசிகர்கள் அதனை ஷேர் செய்து கொண்டாடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com