டி20 உலகக்கோப்பை: இங்கிலாந்துக்கு 197 ரன்கள் இலக்கு நிர்ணயித்த வெஸ்ட் இண்டீஸ்

சிறப்பாக விளையாடிய ஷெர்பேன் ரூதர்போர்ட் அரைசதம் அடித்து அசத்தினார். இங்கிலாந்து அணி தரப்பில் அடில் ரசீத் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
டி20 உலகக்கோப்பை: இங்கிலாந்துக்கு 197 ரன்கள் இலக்கு நிர்ணயித்த வெஸ்ட் இண்டீஸ்
Published on

10-வது டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் கடந்த 7-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், இன்றைய போட்டியில் வேஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகள் மோதி வருகின்றன

இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது.

தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பிரான்டன் கிங் 1 ரன்னிலும் ஹோப் டக் அவுட்டாகியும் வெளியேறினர். அடுத்ததாக களமிறங்கிய ஷிம்ரன் ஹெட்மயர் 23 ரன்னிலும் ரோஸ்டன் சேஸ் 34 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

சிறப்பாக விளையாடிய ஷெர்பேன் ரூதர்போர்ட் அரைசதம் அடித்து அசத்தினார். கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடிய ஜேசன் ஹோல்டர் 33 ரன்கள் அடித்து அவுட்டானார்.

வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் குவித்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் ரூதர்போர்ட் 76 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் கடைசிவரை களத்தில் இருந்தார்.

இங்கிலாந்து அணி தரப்பில் அடில் ரசீத் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com