டி20 உலகக்கோப்பை: இத்தாலியை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி

வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் எடுத்தது. அதிரடியாக விளையாடிய கேப்டன் ஹோப் 75 ரன்கள் அடித்தார்.
டி20 உலகக்கோப்பை: இத்தாலியை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி
Published on

டி20 உலகக் கோப்பை தொடரின் இன்றைய ஆட்டத்தில் சி பிரிவில் இடம் பெற்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் - இத்தாலி அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இத்தாலி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் எடுத்தது. அதிரடியாக விளையாடிய கேப்டன் ஹோப் 75 ரன்கள் அடித்து அவுட்டானார்.

இதையடுத்து 166 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இத்தாலி அணி 18 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 123 ரங்களுக்கு ஆல் அவுட்டானது.

இதன்மூலம் 42 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது. டீக் போட்டியில் விளையாடிய 4 போட்டிகளிலும் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்று வசதியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com