டி20 உலகக்கோப்பை: நமீபியாவிற்கு எதிரான போட்டியில் அதிவேக அரைசதம் அடித்த இஷான் கிஷன்

3 சிக்ஸர்கள் 1 பவுண்டரி அடித்து 22 ரன்னில் சஞ்சு சாம்சன் ஆட்டமிழந்தார்.அதிரடியாக விளையாடிய இஷான் கிஷன் 20 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார்.
டி20 உலகக்கோப்பை: நமீபியாவிற்கு எதிரான போட்டியில் அதிவேக அரைசதம் அடித்த இஷான் கிஷன்
Published on

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நடப்பு சாம்பியனான இந்தியா ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளது. பாகிஸ்தான், அமெரிக்கா, நமீபியா, நெதர்லாந்து ஆகிய அணிகளும் அந்தப் பிரிவில் உள்ளன.

சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த முதல் போட்டியில் அமெரிக்காவை 29 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

இந்நிலையில், இன்று இந்திய அணி 2-வது ஆட்டத்தில் நமீபியாவுடன் மோதுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

உடல் தகுதி இல்லாமல் அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் ஆடிய அதிரடி பேட்ஸ்மேன் அபிஷேக் சர்மா டக் அவுட் ஆனார். இன்றைய போட்டியில் அவர் விளையாடவில்லை. அதனால் இஷான் கிஷனுடன் சஞ்சு சாம்சன் தொடக்க வரிசையில் விளையாடினார்.

இப்போட்டியில் 3 சிக்ஸர்கள் 1 பவுண்டரி அடித்து 22 ரன்னில் சஞ்சு சாம்சன் ஆட்டமிழந்தார். இதையடுத்து அதிரடியாக விளையாடிய இஷான் கிஷன் 20 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். 24 பந்துகளில் 61 ரன்கள் அடித்து இஷான் கிஷன் ஆட்டமிழந்தார். தற்போது வரை 7.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 104 ரன்கள் அடித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com