ஹர்திக் பாண்ட்யா, பும்ரா அபாரம்: 2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அபாரம்..!

ஹர்திக் பாண்ட்யா முதல் ஓவரில் ரன் கொடுக்காமல் ஒரு விக்கெட் வீழ்த்தினார்.பும்ரா 2-வது ஓவரில் 13 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.
ஹர்திக் பாண்ட்யா, பும்ரா அபாரம்: 2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அபாரம்..!
Published on

டி20 உலகக் கோப்பையில் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டி கொழும்பில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா இஷான் கிஷனின் (77) அபார ஆட்டத்தால் 175 ரன்கள் குவித்தது.

பின்னர் 176 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணியின் சகிப்சதா ஃபர்ஹான், சயீம் ஆயுப் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை ஹர்திக் பாண்ட்யா வீசினார். இந்த ஓவரின் 4-வது பந்தில் ஃபர்ஹான் ரன்ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

அடுத்து சல்மான் ஆகா களம் இறங்கினார். 2-வது ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் சயீம் ஆயுப் சிக்சர் அடித்தார். அந்த பந்தில் எல்.பி.டபிள்யூ மூலம் வெளியேறினார். அடுத்து பாபர் அசாம் களம் இறங்கினார். 5-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டிய சல்மான் ஆகா, அடுத்த பந்தில் ஹர்திக் பாண்ட்யாவிடம் கேடச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

பாகிஸ்தான் 2 ஓவரில் 13 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com