சிக்ஸ் பேக்ஸ் உடற்கட்டுடன் பீச் வாலிபால் விளையாடும் இந்திய வீரர்கள்- வைரலாகும் வீடியோ

இந்திய அணி வீரர்கள் அமெரிக்காவில் இருந்து வெஸ்ட் இண்டீஸ் பயணம் மேற்கொண்டனர். ஜூன் 20-ம் தேதி இந்திய அணி தனது முதல் சூப்பர் 8 போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணியுடன் மோதவுள்ளது.
சிக்ஸ் பேக்ஸ் உடற்கட்டுடன் பீச் வாலிபால் விளையாடும் இந்திய வீரர்கள்- வைரலாகும் வீடியோ
Published on

பர்படாஸ்:

டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்று நாளை மறுநாள் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் தொடங்கவுள்ளது. இதற்காக இந்திய அணி வீரர்கள் அமெரிக்காவில் இருந்து வெஸ்ட் இண்டீஸ் பயணம் மேற்கொண்டனர்.

இதன்பின் ஓய்வெடுத்த இந்திய அணி வீரர்கள், இன்று பார்படாஸ் பீச்சில் உற்சாகமாக விளையாடியுள்ளனர். இந்திய அணியின் விராட் கோலி, ரிங்கு சிங், அர்ஷ்தீப் சிங், சிவம் துபே, ஹர்திக் பாண்டியா, சாஹல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், கலீல் அஹ்மத், சஞ்சு சாம்சன் உள்ளிட்டோர் விளையாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதில் ஒரு பக்கம் ரிங்கு சிங் 6 பேக் உடலுடனும் இன்னொரு பக்கம் 8 பேக் உடற்கட்டுடன் விராட் கோலி உற்சாகத்துடன் பீச் வாலிபால் விளையாடி இருக்கிறார். இருவரின் புகைப்படங்களையும் பதிவிட்டு இந்திய வீரர்களின் ஃபிட்னஸை ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

ஜூன் 20-ம் தேதி இந்திய அணி தனது முதல் சூப்பர் 8 போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணியுடன் மோதவுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com