176 ரன்கள் இலக்கை 16 ஓவரிலேயே எட்டிய தென் ஆப்பிரிக்கா

தென் ஆப்பிரிக்கா தரப்பில் கேப்டன் மார்க்ரம் 82 ரன்கள் குவித்தார்.டி காக் 44 ரன்னில் ஆட்டமிழந்தார்.
176 ரன்கள் இலக்கை 16 ஓவரிலேயே எட்டிய தென் ஆப்பிரிக்கா
Published on

டி20 கிரிக்கெட் தொடரில் சுப்பர் 8 சுற்றுகள் நடைபெற்று வருகிறது. இதில் இன்றைய ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் விளையாடியது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி தொடக்கத்தில் 83 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து திணறியது. இதனையடுத்து ஹோல்டர் மற்றும் ஷெப்பர்ட் ஜோடி சேர்ந்து பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இறுதி ஓவரில் ஹோல்டர் 49 ரன்னில் ரன் அவுட் ஆனார். ஷெப்பர்ட் 52 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் எடுத்தது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் லுங்கி இங்கிடி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதனையடுத்து தென் ஆப்பிரிக்கா அணியின் தொடக்க வீரர்களாக மார்க்ரம்- டி காக் களமிறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினர். இதில் டி காக் 27 பந்தில் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதில் 4 பவுண்டரி 4 சிக்சர் அடங்கும்.

இதனை தொடர்ந்து மார்க்ரம் உடன் ரிக்கல்டன் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய மார்க்ரம் 27 பந்தில் அரை சதம் விளாசினார். கடைசி வரை விளையாடிய ரிக்கல்டன் 45 ரன்னிலும் மார்க்ரம் 82 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதனால் தென் ஆப்பிரிக்கா அணி 16.1 ஓவரில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 177 ரன்கள் எடுத்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

X

Maalai Malar
www.maalaimalar.com