17 வருடங்களுக்குப் பிறகு டி20 கோப்பையை தட்டித் தூக்கிய இந்தியா: 2-முறை சாம்பியன்

2007-ல் இந்தியா டோனி தலைமையில் சாம்பியன் பட்டம் வென்றது.17 வருடத்திற்குப் பிறகு தற்போது சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
17 வருடங்களுக்குப் பிறகு டி20 கோப்பையை தட்டித் தூக்கிய இந்தியா: 2-முறை சாம்பியன்
Published on

இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 இறுதிப் போட்டியில் இந்தியா 7 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அறிமுகமான 2007-ல் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. அதன்பின் இந்தியா டி20 உலகக் கோப்பையை வெல்ல முடியாமல் இருந்தது. இந்த நிலையில் 17 வருடத்திற்குப் பிறகு இந்திய அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

வெஸ்ட் இண்டீஸ் அணி இதற்கு முன்னதாக இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்றது. அதன்பின் இந்தியா இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

பும்ரா தொடர் நாயகன் விருதை வென்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com