இந்திய அணியின் வெற்றிக்காக அனுமன் பாடல் பாடிய மாணவர்கள்

இந்திய அணி வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை தட்டி சென்றது. காட்சிகளை பார்த்த பயனர்கள் வீடியோவை லைக் செய்தனர்.
இந்திய அணியின் வெற்றிக்காக அனுமன் பாடல் பாடிய மாணவர்கள்
Published on

டி-20 உலககோப்பை கிரிக்கெட்டில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்திய அணி தென்ஆப்ரிக்காவை வீழ்த்தி வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை தட்டி சென்றது. இந்திய அணியின் வெற்றியை நாடு முழுவதும் ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.

முன்னதாக இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவதற்காக ரசிகர்கள் செய்த பிரார்த்தனை தொடர்பான சில வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வகையில் பாட்னாவில் உள்ள வேதா வித்யாலயா மாணவர்கள் இந்திய கிரிக்கெட் வீரர்களின் புகைப்படங்களை கையில் வைத்துக்கொண்டு, இந்திய அணி வெற்றி பெற வேண்டி அனுமன் பாடல் பாடிய காட்சிகள் உள்ளது.

அந்த வீடியோவில், மாணவர்கள் தங்கள் கைகளில் ரோகித் சர்மா, விராட் கோலி, குல்திப் யாதவ், பும்ரா உள்ளிட்ட இந்திய வீரர்களின் புகைப்படங்களை கையில் வைத்து கொண்டு அனுமன் மந்திரம் பாடும் காட்சிகளை பார்த்த பயனர்கள் வீடியோவை லைக் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com