

ஐசிசி வெளியிட்டுள்ள டெஸ்ட் பவுலிங் தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் பும்ராவை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.
ஐசிசி சார்பில் சிறந்த வீரர், வீராங்கனைகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், டெஸ்ட் போட்டியின் பவுலர் தரவரிசைப் பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டது.
இதில் இந்தியாவின் ஜஸ்பிரீத் பும்ராவை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் முதலிடம் பிடித்துள்ளார்.
சமீபத்தில் நடந்த வங்கதேசத்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டும், 2வது இன்னிங்சில் 4 விக்கெட்டும் வீழ்த்தி அசத்தினார். இதையடுத்து, பும்ராவை விட கூடுதல் புள்ளிகள் பெற்று முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.
மிட்செல் ஸ்டார்க் (ஆஸ்திரேலியா)- 872 புள்ளி
ஜஸ்பிரீத் பும்ரா (இந்தியா) - 862 புள்ளி
மேட் ஹென்றி (நியூசிலாந்து) - 861 புள்ளி
பேட் கம்மின்ஸ் (ஆஸ்திரேலியா) - 841 புள்ளி
மார்கோ யான்சென் (தென் ஆப்பிரிக்கா) - 825 புள்ளி