இலங்கை தொடர் சுமாராக இருந்தாலும் 4-ம் இடத்தில் சிறப்பான சராசரி வைத்திருக்கும் சுப்மன் கில்

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மூன்று போட்டிகளிலும் சேர்த்த 74 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார்.
சுப்மன் கில்
சுப்மன் கில்
Published on
Summary

சுப்மன் கில் இதுவரை 43 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 3043 ரன்கள் அடித்துள்ளார். இதில் 11 சதங்கள் அடங்கும்.

இந்திய டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருப்பவர் சுப்மன் கில். இவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். 4-வது இடத்தில் களம் இறங்கி வருகிறார்.

நேற்றுடன் முடிவடைந்த இலங்கைக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 1-0 எனக் கைப்பற்றியது. முதல் போட்டியில் வெற்றி பெற்ற நிலையில், 2-வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது.

இலங்கை தொடரில் சுப்மன் கில்

சுப்மன் கில் முதல் போட்டியின் முதல் இன்னிங்சில் 16 ரன்களும், 2-வது இன்னிங்சில் 8 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தார். 2-வது டெஸ்ட் முதல் இன்னிங்சில் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்யவில்லை.

இருந்தபோதிலும் அவருடைய சராசரி இன்றும் சிறப்பாகவே உள்ளது. குறைந்தது ஆயிரம் ரன்களுக்கு மேல் அடித்த வீரர்களில் 4-வது வரிசையில் சுப்மன் கில் இன்னும் முதலிடத்தில் உள்ளார். அவருடைய சராசரி 75.93 சதவீதமாக உள்ளது. சவுரவ் கங்குலியின் சராசரி 66 சதவீதமாக உள்ளது. கேரி சோபர்ஸ் சராசரி 63.75 ஆகும். எவர்டன் வீக்ஸ் சராசரி 63.62 சதவீதம் ஆகும். கிரேம் பொல்லாக்கின் சராசரி 62.57 சதவீதம் ஆகும்

டெஸ்ட் கிரிக்கெட்டில் சுப்மன் கில்

சுப்மன் கில் இதுவரை 43 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 3043 ரன்கள் அடித்துள்ளார். இதில் 11 சதம், 9 அரைசதம் ஆகும். அதிகபட்சமாக ஒரு இன்னிங்சில் 269 ரன்கள் அடித்துள்ளார். தொடக்க காலத்தில் ஓபனிங் பேட்ஸ்மேனாக விளையாடி வந்தார். தற்போது 4-வது இடத்தில் விளையாடுகிறார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com