நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள்: முதல் டெஸ்ட் போட்டி குறித்து சுப்மன் கில் தகவல்

டி20, ஒருநாள் தொடரை இந்தியா கைப்பற்றிய நிலையில் நாளை மறுதினம் டெஸ்ட் தொடர் தொடங்குகிறது.
சுப்மன் கில்
சுப்மன் கில்
Published on: 

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே முடிவடைந்த 5 போட்டிகளில் கொண்ட டி20 தொடரை 3-2 என இந்தியா கைப்பற்றியது. ஒருநாள் தொடரை 3-1 எனக் கைப்பற்றியது. இந்த நிலையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை நாளை மறுதினம் வெலிங்டனில் தொடங்குகிறது. வெலிங்டனில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. அத்துடன் ஆடுகளம் புற்கள் நிறைந்து காணப்படுகிறது.

இதனால் ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். முதல் இரண்டு நாட்கள் பேட்டிங் செய்வது கடினம். அடுத்த மூன்று நாட்கள் பந்து வீசுவது கடினம். முதல் இரண்டு நாட்கள் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருப்பதால் இந்தியா நான்கு வேகப்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கும் என்று இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சுப்மன் கில் கூறியதாவது:-

நிச்சயமாக நான்கு வேகப்பந்து வீச்சு வாய்ப்புகளை அணியில் வைத்திருக்க விரும்புகிறோம். ஆனால் யாரைத் தேர்வு செய்வது என்பது குறித்து இன்னும் ஆலோசித்து வருகிறோம்.

போட்டியின் மூன்றாவது, நான்காவது மற்றும் ஐந்தாவது நாட்களில் ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக மாறக்கூடும். எனவே அதிக வேகம் கொண்ட ஒருவர், துல்லியமாகப் பந்து வீசக்கூடிய ஒருவர் என அனைத்து வகையான திறமைகளும் அணியில் இருக்க வேண்டும்.

அன்ஷுல் கம்போஜ்

ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், ஆகாஷ் தீப், அன்ஷுல் கம்போஜ், பிரசித் கிருஷ்ணா, குர்னூர் பிரார் ஆகியோரிடையே இடத்திற்கான போட்டி நிலவுகிறது.

பேட்டிங்கிலும் பங்களிக்கக்கூடிய ஆகாஷ் தீப், அன்ஷுல் கம்போஜ் ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்கலாம். பிரசித் கிருஷ்ணா அல்லது குர்னூர் பிரார் ஆகியோரில் ஒருவரைத் தேர்வு செய்வதும் முக்கிய முடிவாக இருக்கும். இந்திய அணி ஒரு சுழற்பந்து வீச்சாளருடன் களமிறங்கவும் திட்டமிட்டுள்ளது.

இவ்வாறு சுப்மன் கில் தெரிவித்துள்ளார்.

X