விமர்சித்த சிவம் துபே மனைவி... ஜெய் ஷாவை துணைக்கு அழைத்த பாஜக பெண் தலைவர்

முகமது நபிக்கு எதிராக பேசும் நசியா கான் மீது நடவடிக்கை எடுக்க கோரி இன்ஸ்டாவில் பதிவிட்ட சிவம் துபே மனைவி.பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, துபேவை கண்காணிக்க வேண்டும் என பாஜக தலைவர் கோரிக்கை
shivam dube
Published on

இந்திய அணியின் ஆல் ரவுண்டரான சிவம் துபே 2021 ஆம் ஆண்டு தனது நீண்ட நாள் காதலியான அஞ்சும் கானை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்பும் அஞ்சும் கான் இஸ்லாம் மதத்தையே பின்பற்றி வருகிறார்.

இந்நிலையில், அஞ்சும் கான் பாஜகவின் சிறுபான்மை பிரிவு தலைவர் நசியா கானை விமர்சித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

அந்த பதவியில், முகமது நபிக்கு எதிராக தொடர்ச்சியாக நசியா கான் பேசி வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று #arrestnaziaelahikhan என்ற ஹேஸ்டேக் உடன் அவர் பதிவிட்டிருந்தார். அந்த பதிவு வைரலானதை தொடர்ந்து அவர் அந்த பதிவை நீக்கிவிட்டார்.

தற்போது அந்த பதிவிற்கு பாஜகவின் சிறுபான்மை பிரிவு தலைவர் நசியா கான் பதில் அளித்துள்ளார்.

அவரது பதிவில், நீங்கள் ஒரு இந்துவை திருமணம் செய்துள்ளீர்கள். நீங்கள் இப்போது இஸ்லாத்தின் ஒரு பகுதி அல்ல. எனக்கு எதிரான வன்முறையை தூண்டும் பொய்யான தகவலை நீங்கள் வெளியிட்டுள்ளீர்கள். பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, துபேவை கண்காணிக்க வேண்டும் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.

அவர் தனது பதிவில் பிசிசிஐ, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் டெல்லி காவல்துறையை டேக் செய்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com