ஐசிசி தரவரிசை: பந்துவீச்சில் முதலிடம் பிடித்த பாகிஸ்தான் வீராங்கனை

ஐசிசி டி20 பெண்களுக்கான பந்துவீச்சாளர்களுக்கான பட்டியலை வெளியிட்டது. பாகிஸ்தான் வீராங்கனை சாதியா இக்பால் இடதுகை சுழல் பந்துவீச்சாளராக இருக்கிறார்.
ஐசிசி தரவரிசை: பந்துவீச்சில் முதலிடம் பிடித்த பாகிஸ்தான் வீராங்கனை
Published on

துபாய்:

ஐசிசி டி20 பெண்களுக்கான பந்துவீச்சாளர்களுக்கான பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதில், பாகிஸ்தான் வீராங்கனை சாதியா இக்பால் ஐசிசி டி20 தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார்.

ஆஸ்திரேலியா வீராங்கனை அன்னாபெல் சதர்லேண்ட், இந்திய வீராங்கனை தீப்தி சர்மாவை முந்தி முதலிடம் பிடித்துள்ளார்.

சாதியா இக்பால் இடதுகை சுழல் பந்துவீச்சாளராக இருக்கிறார். தென் ஆப்பிரிக்கா உடனான டி20 தொடரில் அசத்திய சாதியா இக்பால் 5 விக்கெட் எடுத்து அசத்தினார். இதனால் 2 இடம் முன்னேறி முதலிடம் பிடித்தார். கடைசி போட்டியில் 3 விக்கெட் எடுத்து வெற்றிக்கு வித்திட்டார்.

கடந்த 2024-ல் முதலிடம் பிடித்த இவர், சதர்லேண்ட் 2025-ல் முதலிடத்துக்கு வந்த பிறகு தரவரிசையில் கீழிறங்கினார்.

பாகிஸ்தானின் சாதியா இக்பால் 743 புள்ளிகள் பெற்று முதலிடத்திலும், இந்தியாவின் தீப்தி சர்மா 729 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்திலும், இங்கிலாந்தின் சோஃபி எக்லெஸ்டோன் 727 புள்ளிகள் பெற்று மூன்றாமிடத்தையும், ஆஸ்திரேலியாவின் அன்னாபெல் சதர்லேண்ட் 721 புள்ளிகள் பெற்று நான்காமிடத்தையும் பெற்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com