IPL 2026 | 6-வது டைட்டில் எங்களுக்குத்தான்- சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்

சிஎஸ்கே அணியில் நட்சத்திர பேட்ஸ்மேன்கள் உள்ளனர்.இந்த முறை பேட்டிங் சிஎஸ்கே சவாலான அணியாக விளங்கும்.
IPL 2026 | 6-வது டைட்டில் எங்களுக்குத்தான்-  சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்
Published on

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 8-ந்தேதி) உடன் முடிவடைகிறது. அதன்பின் மார்ச் 28-ந்தேதி ஐபிஎல் 2026 கிரிக்கெட் திருவிழா தொடங்குகிறது. இதற்கான 10 அணிகளும் பயிற்சி முகாமை தொடங்கியுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் நாவலூரில் உள்ள உயர் திறன் மையத்தில் பயிற்சி முகாமை தொடங்கியுள்ளனர். துணை பயிற்சியாளர் மேற்பார்வையில் வீரர்கள் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் சி.எஸ்.கே.யின் புதிய ஜெர்சி அறிமுக விழா நடைபெற்றது. இதில் சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வார்ட், ஆயுஷ் மாத்ரே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது 2026 டைட்டில்தான் இலக்கு என ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கெய்க்வாட் கூறுகையில் "எட்ட முடியாத இலக்கு எதுவுமில்லை. வரவிருக்கின்றன சீசனில் 6-வது டைட்டிலுக்கான சிஎஸ்கே அணி வரும்" என்றார்.

கடந்த முறை நடைபெற்ற ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தது.

தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியில் ருதுராஜ் கெய்க்வாட், எம்.எஸ். தோனி, சஞ்சு சாம்சன், டெவால்டு பிரேவிஸ், ஆயுஷ் மாத்ரே, சர்பராஸ் கான், உர்வில் பட்டேல், ஷிவம் துபே போன்ற நட்சத்திர பேட்ஸ்மேன்கள் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com