கடந்த 2 ஆண்டு டெஸ்ட்டில் விளையாடாத வீரரை கேப்டனாக நியமித்த வெஸ்ட் இண்டீஸ்

வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் அணியின் கேப்டனாக ரோஸ்டன் சேஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.இதுநாள்வரை 49 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 5 சதங்கள் மற்றும் 11 அரைசதங்களுடன் 2265 ரன்கள் எடுத்துள்ளார்.
கடந்த 2 ஆண்டு டெஸ்ட்டில் விளையாடாத வீரரை கேப்டனாக நியமித்த வெஸ்ட் இண்டீஸ்
Published on

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் தங்களுடைய அணியில் பல மாற்றங்களைச் செய்து வருகிறது. அதன்படி வெஸ்ட் இண்டீஸ் டி20 அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ரோவ்மன் பவல் அதிரடியாக நீக்கப்பட்டதுடன், ஷாய் ஹோப் புதிய டி20 கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக ஆல் ரவுண்டர் ரோஸ்டன் சேஸ் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக இந்த ஆண்டு மார்ச் மாதம் கேப்டன் பதவியில் இருந்து கிரெய்க் பிராத்வைட் விலகியதை அடுத்து ரோஸ்டன் சேஸ் தற்போது வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 

தற்சமயம் 33 வயதான ரோஸ்டன் சேஸ் கடந்த 2023-ம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய நிலையில் அதன்பின் தற்போது வரை அவர் எந்த டெஸ்ட் போட்டிக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணியில் சேர்க்கப்படவில்லை. இப்படியான சூழ்நிலையில் அவர் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் அணிக்காக கடந்த 2016-ம் ஆண்டு அறிமுகமான இவர் இதுவரை 49 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 5 சதங்கள் மற்றும் 11 அரைசதங்களுடன் 2265 ரன்களையும், பந்துவீச்சில் 4 முறை ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன் 85 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com