எனக்கு எண்டே கிடையாது.. இங்கிலாந்து டெஸ்டிலும் கேப்டனாக தொடரும் ரோகித் சர்மா - வெளியான தகவல்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-25 ​​இறுதிப் போட்டிக்கு இந்தியா முன்னேறத் தவறியது. அனைத்து முன் முடிவுகளையும் தவிடுபொடியாக்கி 2025 சாம்பியன்ஸ் டிராபியை ரோகித் சர்மா தலைமையிலான அணி வென்றெடுத்து.
எனக்கு எண்டே கிடையாது.. இங்கிலாந்து டெஸ்டிலும் கேப்டனாக தொடரும் ரோகித் சர்மா - வெளியான தகவல்
Published on

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியாவை வழிநடத்த ரோகித் சர்மாவுக்கு பிசிசிஐ மற்றும் தேர்வுக் குழுவின் ஆதரவு கிடைத்துள்ளது. வரவிருக்கும் தொடருக்கு அணியின் கேப்டனாக ரோகித் சர்மா தான் இருக்க வேண்டும் என குழுவின் அனைத்து உறுப்பினர்களும் விருப்பம் தெரிவித்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவிடம் தொடர் தோல்விகளைத் தொடர்ந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-25 இறுதிப் போட்டிக்கு இந்தியா முன்னேறத் தவறியது.

இதனால் ஹிட்மேன் ரோகித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து தூக்கி எறியப்படுவார் என்று ஊகங்கள் எழுந்தன. இதற்கிடையே இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது டெஸ்டில் ரோகித் வெளியேறினார். இதனால் டெஸ்ட் கேப்டனாக அவரது எதிர்காலம் குறித்த விவாதம் எழுந்தது.

ஆனால் அனைத்து முன் முடிவுகளையும் தவிடுபொடியாக்கி 2025 சாம்பியன்ஸ் டிராபியை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வென்றெடுத்து.

இதன்மூலம் ரோகித் சர்மா தன்னை நிரூபித்து உள்ளார். எனவே அவரை ஓரம்கட்டும் முடிவை பிசிசிஐ கைவிட்டதாக தெரிகிறது.  ரோகித் சர்மா மீண்டும் ஒரு பெரிய சுற்றுப்பயணத்தில் இந்தியாவை வழிநடத்த உள்ளார்.

அதன்படி இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியாவை ரோகித் சர்மா கேப்டனாக வழிநடத்த அதிகம் வாய்ப்புள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com