ஐசிசி தரவரிசை: மீண்டும் முதல் இடத்தில் ரோகித்.. ஆல் ரவுண்டரில் முதல் இடம் பிடித்த ஜிம்பாப்வே வீரர்

ஒருநாள் பேட்டர் தரவரிசையில் ரோகித் சர்மா மீண்டும் முதல் இடம் பிடித்துள்ளார்.முதல் இடத்தில் இருந்த நியூசிலாந்து வீரர் 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
ஐசிசி தரவரிசை: மீண்டும் முதல் இடத்தில் ரோகித்.. ஆல் ரவுண்டரில் முதல் இடம் பிடித்த ஜிம்பாப்வே வீரர்
Published on

ஆடவருக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி ஒருநாள் பேட்டர் தரவரிசையில் இந்திய அணியின் தொடக்க வீரர் ரோகித் சர்மா மீண்டும் முதல் இடத்தை பிடித்துள்ளார். அவர் 781 புள்ளிகளுடன் முதல் இடத்தை ரோகித் பிடித்துள்ளார்.

முதல் இடத்தில் இருந்த நியூசிலாந்து வீரர் 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். சுப்மன் கில் 4-வது இடத்திலும் விராட் கோலி 5-வது இடத்திலும் தொடர்கின்றனர். ஷ்ரேயாஸ் ஐயர் ஒரு இடம் பின் தங்கி 9-வது இடத்தை பிடித்துள்ளார். மேலும் நியூசிலாந்து வீரர் டேவான் கான்வே 11 இடங்கள் முன்னேறி 31-வது இடத்தை பிடித்துள்ளார்.

டி20 ஆல் ரவுண்டர் தரவரிசையில் ஜிம்பாப்வே அணியின் ஆல் ரவுண்டர் சிக்கந்தர் ராசா முதல் முறையாக முதல் இடம் பிடித்து அசத்தியுள்ளார். ஆல் ரவுண்டர் தரவரிசையில் முதல் இடம் பிடித்த முதல் ஜிம்பாப்வே வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com