ஆர்.சி.பி. அணியுடன் பிறந்தநாள் கொண்டாடிய அனுஷ்கா சர்மா

வீராட்-அனுஷ்கா RCB நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாட்டம்.புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
ஆர்.சி.பி. அணியுடன் பிறந்தநாள் கொண்டாடிய அனுஷ்கா சர்மா
Published on

பாலிவுட் நடிகைகளில் முன்னணி நடிகையான அனுஷ்கா சர்மா 2008 ஆம் ஆண்டு வெளிவந்த ரப் நே பனா தி ஜோடி திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். இவரும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான விராட் கோலியும் காதலித்து வந்தனர்.

இவர்கள் இருவருக்கும் 2017- ம் ஆண்டு காதல் திருமணம் நடந்தது. 2021 ஜனவரி மாதம் வாமிகா என்ற பெண் குழந்தை பிறந்தது. இவர்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் ஆண் குழந்தை பிறந்தது. அவருக்கு அகாய் என்று பெயரிட்டுள்ளனர்.

இந்த நிலையில் அனுஷ்கா ஷர்மா, விராட்கோலி விளையாடும் முக்கிய போட்டிகளில் எல்லாம் களத்திற்கு வந்து அவரை

உற்சாகப்படுத்த என்றுமே தவறியதில்லை. சமீபத்தில் நடைபெற்ற உலககோப்பை தொடரில் விராட்கோலி தனது 50-வது சதத்தை பூர்த்தி செய்தபோது அனுஷ்கா சர்மா, முத்தங்களை பறக்கவிட்டு உற்சாகத்தை கொடுத்தார். தற்போதும் கூட ஐபிஎல் தொடரில் RCB அணியில் விளையாடும் விராட் கோலியை அவ்வபோது சந்தித்து உற்சாகப்படுத்தி வருகிறார்.

 இந்த நிலையில் அனுஷ்கா ஷர்மா கடந்த மே- 1ந்தேதி அன்று தனது 36-வது பிறந்த நாளை வீராட் கோலியின் RCB நண்பர்களுடன் சேர்ந்து பிறந்தநாள் கொண்டாடினார். இதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com