பசியில் இருக்கும் சிங்கத்திற்கு ஆட்டை உணவாக வழங்கியது போல்.., வெஸ்ட் இண்டீஸ் கேப்டனை சாடிய அஸ்வின்

அகீல் ஹொசைன் ஓவரில் சஞ்சு சாம்சன் 2 சிக்சர்கள், 2 பவுண்டரிகள் விளாசினார்.
அஸ்வின்
அஸ்வின்
Published on: 

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையில் 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. 2-வது போட்டி ராஞ்சியில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 249 ரன்கள் குவித்தது. இருந்த போதிலும் வெஸ்ட் இண்டீஸ் 18.3 ஓவர்களில் இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

சஞ்சு சாம்சன் 41 பந்துகளில் 82 ரன்கள்

இந்தியாவின் தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் 41 பந்துகளில் 82 ரன்கள் விளாசினார். இந்தியா பேட்டிங் செய்யும்போது, சஞ்சு சாம்சனை குறிவைத்து வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஷாய் ஹோப், அகீல் ஹொசைனை தொடர்ந்து 3 ஓவர்கள் வீச வைத்தார். இதில் 3-வது ஓவரில் சஞ்சு சாம்சன் தலா இரண்டு சிக்ஸ், பவுண்டரிகள் விளாசினார். அவர் முதல் 3 ஓவரில் 46 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.

சஞ்சு சாம்சனுக்கு எதிராக தொடர்ந்து 3 ஓவர்களை பயன்படுத்தியது தவறு என ஷாய் ஹோப் முடிவை, இந்திய அணியின் முன்னாள் வீரர் அஸ்வின் விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அஸ்வின் கூறியதாவது:-

சஞ்சு சாம்சன் ஆரம்பத்தில் தடுமாற்றத்துடன் காணப்பட்டார். ஏனெனில் அவர் அப்போது ரன் சேர்க்கும் நிலையில் இல்லை. இருப்பினும், ஷாய் ஹோப் ஒரு தவறு செய்தார். சஞ்சு சாம்சன் மீது அழுத்தம் கொடுக்கும் முயற்சியில், ஒரே முனையிலிருந்து தொடர்ந்து சுழற்பந்து வீச்சாளர்களைப் பயன்படுத்திக்கொண்டே இருக்க முடியாது.

அகீல் ஹொசைன் பவர்-பிளேயில் 3 ஓவர் வீசினார்

பவர்-பிளே (powerplay) நேரத்தில் அகீல் ஹொசைனை வைத்துத் தொடர்ந்து மூன்று ஓவர்கள் வீசச் செய்தது, பசியுடன் இருக்கும் சிங்கத்திடம் ஆட்டைத் தட்டில் வைத்து நீட்டுவது போன்றது. சாம்சன் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு அகீல் ஹொசைனைத் துணிச்சலாக எதிர்கொண்டார்.

ஆபத்தான சூழலில் இருக்கும்போதும், அணியிலிருந்து நீக்கப்படலாம் என்ற நிலை இருக்கும்போதும், தன்னைத் தற்காத்துக்கொள்வதற்கே முன்னுரிமை அளிப்பது மனித இயல்பு. இருப்பினும், அவர் அணிக்காகத் தொடர்ந்து ரிஸ்க் எடுக்கிறார். அவரது இந்தச் சிறந்த மனப்பான்மையே அவருக்குச் சற்று அதிர்ஷ்டத்தையும் தேடித்தருவதாகத் தெரிகிறது. இன்று ஒரு கேட்ச் நேராக ஃபீல்டரின் கைகளுக்குச் சென்றது, ஆனால் அவர் அதை நழுவவிட்டார்.

இவ்வாறு அஸ்வின் தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com