சையத் முஷ்டாக் அலி கோப்பை: பட்டைய கிளப்பிய படிதார்-48 பந்தில் 135 ரன் குவிப்பு

ரஜத் படிதார் அதிரடியாக ஆடி 41 பந்தில் சதமடித்து அசத்தினார்.
padidar
Published on: 
Summary

சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரில் ரஜத் படிதார் ருத்ர தாண்டவம் ஆடி சிக்சர் மழை பொழிந்து சதமடித்தார்.

சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான டி20 தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

நியூ சண்டிகரில் இன்று நடந்த போட்டியில் மத்திய பிரதேசம், அசாம் அணிகள் மோதின. டாஸ் வென்ற அசாம் அணி பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி, மத்திய பிரதேசம் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் விரைவில் அவுட்டாகினர். அன்குஷ் சிங் 23 ரன்னும், ரகுவன்ஷி 19 ரன்னும், அபூர்வ திவேதி 3 ரன்னும் எடுத்தனர்.

ஷிவாங் குமார் அரை சதம்

ஷிவாங் குமாருடன் ரஜத் படிதார் இணைந்தார். இந்த ஜோடி அதிரடியாக ஆடியது. ஷிவாங் குமார் அரை சதமடித்தார்.

அதிரடி காட்டிய ஜோடி

4வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 62 பந்தில் 153 ரன்கள் குவித்தது.

ருத்ர தாண்டவம் ஆடிய படிதார்

முதலில் நிதானம் காட்டிய ரஜத் படிதார் 25 பந்தில் அரை சதம் கடந்தார். அடுத்த 50 ரன்களை 16 பந்தில் கடந்தார்.

இறுதியில், மத்திய பிரதேசம் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 250 ரன்கள் குவித்தது.

சிக்சர் மழை பொழிந்த படிதார்

ரஜத் படிதார் 48 பந்தில் 13 சிக்சர், 8 பவுண்டரி உள்பட 135 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

251 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அசாம் அணி களமிறங்குகிறது.

X