ஆசியக் கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு - பாபர் அசாம், ரிஸ்வானுக்கு இடமில்லை

ஆசியக் கோப்பை டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா வரும் 14-ம் தேதி பாகிஸ்தானுடன் துபாயில் மோதுகிறது
ஆசியக் கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு - பாபர் அசாம், ரிஸ்வானுக்கு இடமில்லை
Published on

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது.

டி20 வடிவில் நடைபெறும் இந்தத் தொடரில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், யுஏஇ, ஓமன் உள்பட 8 அணிகள் பங்கேற்கின்றன.

தலா 4 அணிகள் என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு லீக் சுற்று நடக்கிறது. இதில் இரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும். இந்தச் சுற்றில் முதல் 2 இடம் பிடிக்கும் அணிகள் 28-ம்தேதி பைனலில் மோதும்.

ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா வரும் 14-ம் தேதி பாகிஸ்தானுடன் துபாயில் மோதுகிறது

இந்நிலையில், ஆசியக் கோப்பை டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சல்மான் அகா தலைமையில் ஃபகர் சமான், ஷாஹீன் அஃப்ரிடி, சைம் அயூப், ஹாரிஸ் ராஃப் உள்ளிட்ட 17 வீரர்கள் அடங்கிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் அணியில் மூத்த வீரர்கள் பாபர் அசாம், முகமது ரிஸ்வானுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com