இங்கிலாந்தின் 'தி ஹன்ட்ரட்' தொடரில் பாகிஸ்தான் வீரர்கள் விலக்கப்பட மாட்டார்கள் - ECB கூட்டறிக்கை

ஐபிஎல் உரிமையாளர்களுக்குச் சொந்தமான அணிகள், பாகிஸ்தான் வீரர்களை ஏலத்தில் எடுக்க ஆர்வம் காட்டவில்லைஇங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் மற்றும் 8 அணிகள் இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டுள்ளது.
இங்கிலாந்தின் 'தி ஹன்ட்ரட்' தொடரில் பாகிஸ்தான் வீரர்கள் விலக்கப்பட மாட்டார்கள் - ECB கூட்டறிக்கை
Published on

இங்கிலாந்தில் நடைபெறவுள்ள 'தி ஹன்ட்ரட்' (The Hundred) கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் மார்ச் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், இந்திய ஐபிஎல் (IPL) உரிமையாளர்களுக்குச் சொந்தமான நான்கு அணிகள், பாகிஸ்தான் வீரர்களை ஏலத்தில் எடுக்க ஆர்வம் காட்டவில்லை என்று தகவல்கள் வெளியாகின.

மான்செஸ்டர் சூப்பர் ஜெயண்ட்ஸ், எம்ஐ லண்டன், சதர்ன் பிரேவ் மற்றும் சன்ரைசர்ஸ் லீட்ஸ் ஆகிய நான்கு அணிகளும் இந்திய உரிமையாளர்களால் நிர்வகிக்கப்படுகின்றன. இந்த அணிகள் பாகிஸ்தான் வீரர்களைத் தவிர்க்க முடிவு செய்துள்ளதாக பிரிட்டிஷ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

இந்நிலையில், THE HUNDRED கிரிக்கெட் தொடரில் இந்திய நிறுவனங்களை உரிமையாளர்களாகக் கொண்ட அணிகளில் பாகிஸ்தான் வீரர்கள் இடம்பெற மாட்டார்கள் என்பதற்கு இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், The Hundred தொடர் அனைத்து வீரர்களை உள்ளடக்கியதாக இருக்கும் எனவும், வீரர்கள் தேசத்தின் அடிப்படையில் விலக்கப்பட மாட்டார்கள் எனவும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் மற்றும் 8 அணிகள் இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த தொடரில் இந்திய நிறுவனங்களை உரிமையாளர்களாக கொண்ட அணிகளில் பாகிஸ்தான் வீரர்கள் இடம்பெற மாட்டார்கள் என செய்தி பரவிய நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com