

முத்தரப்பு ஒருநாள் தொடரில் அராபத் மின்ஹாஸ் அசத்தல் பந்துவீச்சில் இங்கிலாந்தை எளிதில் வீழ்த்தியது பாகிஸ்தான்.
பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து அணிகள் பங்கேற்றுள்ள ஒருநாள் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடந்து வருகிறது.
ராவல்பிண்டியில் நேற்று நடந்த 2-வது லீக் போட்டியில் இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 302 ரன்கள் குவித்தது. ஹசன் நவாஸ் 79 ரன்னும், ஆல் ரவுண்டர் அராபத் மின்ஹாஸ் 59 ரன்னும் எடுத்தனர்.
இதையடுத்து, 303 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து 38.4 ஓவரில் 215 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் பாகிஸ்தான் அணி 87 ரன் வித்தியாசத்தில் 2-வது வெற்றி பெற்றது.
இங்கிலாந்து அணியின் டாம் பான்டன் 57 ரன்னும், பென் டக்கெட் 45 ரன்னும், ஜோ ரூட் 33 ரன்னும் எடுத்தனர்.
பாகிஸ்தான் சார்பில் அராபத் மின்ஹாஸ் 6 விக்கெட்டும், ஹரிஸ் ராப் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். அராபத் மின்ஹாஸ் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
அடுத்த ஆட்டத்தில் இங்கிலாந்து-இலங்கை அணிகள் நாளை மோதுகின்றன. இரு அணிகளும் வெற்றிக் கணக்கை துவங்கவில்லை.