ஆசிய விளையாட்டு மகளிர் கிரிக்கெட்: வங்கதேசத்தை வீழ்த்தி வெண்கலம் வென்றது பாகிஸ்தான்

கேப்டன் பாத்திமா சனா 45 ரன்கள் எடுத்தார்.
pakistan team
Published on
Summary

ஆசிய விளையாட்டின் பெண்கள் கிரிக்கெட்டில் வங்கதேசத்தை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றது பாகிஸ்தான்.

ஆசிய விளையாட்டில் பெண்கள் கிரிக்கெட்டின் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டி ஜப்பானில் நடைபெற்றது. இதில் பாகிஸ்தான், வங்கதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் மகளிர் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

பாத்திமா சனா 45 ரன்

அதன்படி, முதலில் ஆடிய பாகிஸ்தான் மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 145 ரன்கள் எடுத்தது.

கேப்டன் பாத்திமா சனா 45 ரன்னும், குல் பெரோசா 31 ரன்னும், ஆலியா ரியாஸ் 25 ரன்னும் எடுத்தனர்.

இதையடுத்து, 146 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேசம் களமிறங்கியது. பாகிஸ்தான் அணியினரின் துல்லிய பந்துவீச்சில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது.

ஷர்மின் அக்தர் ஓரளவு தாக்குப் பிடித்து 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

வெண்கலம் வென்ற பாகிஸ்தான்

இறுதியில், வங்கதேச அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 114 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 31 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றதுடன் வெண்கல பதக்கத்தை வென்றது.

X

Maalai Malar
www.maalaimalar.com