எனது கிரிக்கெட் பயணத்தை செதுக்கியது 2 மகேந்திரன்கள் - உருக்கமாக பேசிய ஜடேஜா

அஸ்வினின் யூடியூப் சேனலுக்கு ஜடேஜா பேட்டியளித்தார். அந்த நேர்காணலில் பல சுவாரஷ்யமான தகவல்களை அவர் பகிர்ந்துள்ளார்.
எனது கிரிக்கெட் பயணத்தை செதுக்கியது 2 மகேந்திரன்கள் - உருக்கமாக பேசிய ஜடேஜா
Published on: 

இந்திய அணியின் சிறந்த ஆல் ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா சக சி.எஸ்.கே. வீரர் அஷ்வினுக்கு பேட்டி அளித்தார். அந்த நேர்காணலில் பல சுவாரஷ்யமான தகவல்களை அவர் பகிர்ந்துள்ளார்.

அந்த நேர்காணலில் பேசிய ஜடேஜா, "எனது கிரிக்கெட் பயணத்தை செதுக்கியது 2 மகேந்திரன்கள் தான். ஒருவர் எனது சிறுவயது பயிற்சியாளர் மகேந்திரசிங் சவுகான். மற்றொருவர் மகேந்திர சிங் தோனி" என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

தோனியை பற்றி ஒரே வார்த்தையில் விவரிக்கச் சொன்னால் என்ன சொல்வீர்கள் என்று ஜடேஜாவிடம் அஷ்வின் கேள்வி எழுப்பினார். அதற்கு "அவரது மகத்துவத்தை விவரிக்க வார்த்தையே இல்லை. அவர் அனைவருக்கும் மேலாக நிற்கிறார்" என்று ஜடேஜா பதிலளித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com