ரோகித் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த மும்பை அணி- காட்டமாக கமெண்ட் செய்த ரசிகர்கள்

ரோகித் மனைவி ரித்விகாவுக்கு இன்று பிறந்தநாள்.இவருக்கு மும்பை இந்தியன்ஸ் எக்ஸ் தளத்தில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தது.
ரோகித் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த மும்பை அணி- காட்டமாக கமெண்ட் செய்த ரசிகர்கள்
Published on

மும்பை:

மும்பை அணியின் கேப்டனாக ரோகித் சர்மா செயல்பட்டு வந்த நிலையில், ஹர்திக் பாண்ட்யாவுக்கு கேப்டன் பதவி கொடுக்கப்பட்டது. இதனால் ரசிகர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வந்தனர். மேலும் மும்பை இந்தியன்ஸ் அணியின் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் பக்கத்தில் பாலோயர்களின் எண்ணிக்கை 13 மில்லியனில் இருந்து 8 மில்லியனாக குறைந்தது.

இந்நிலையில் ரோகித் சர்மா மனைவி ரித்திகாவுக்கு மும்பை இந்தியன்ஸ் எக்ஸ் தளத்தில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தது. மேலும் எங்களின் நம்பர் ஒன் ஆதரவாளர் என தெரிவித்திருந்தது. 

இந்த பதவிக்கு ரசிகர்கள் பலர் காட்டமாக கமெண்ட் செய்துள்ளனர். ஒருசில ரசிகர்கள் கூறியது, பிறந்தநாள் வாழ்த்துக்கள் ரித்திகா ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஆதரவு இல்லை என கூறினர். மேலும் சிலர் அன்பாலோ மும்பை இந்தியன்ஸ், உங்களுக்கு ஆதரவு இல்லை ரோகித்துக்கு மட்டும்தான் ஆதரவு, ரோகித்தை மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து விடுவியுங்கள் எனவும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com