டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்ஸ்: முதல் 5 இடங்களுக்குள் நுழைந்தார் சூர்யகுமார் யாதவ்

ரோகித் சர்மா 205 சிக்சர்களுடன் முதல் இடத்தில் நீடிக்கிறார்.மார்ட்டின் கப்தில் 2-வது இடத்திலும், நிக்கோலஸ் பூரன் 3-வது இடத்திலும் நீடிக்கின்றனர்.
டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்ஸ்: முதல் 5 இடங்களுக்குள் நுழைந்தார் சூர்யகுமார் யாதவ்
Published on

இந்தியா- வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி நேற்று குவாலியரில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் களம் இறங்கிய வங்கதேசம் 127 ரன்னில் ஆல்அவுட் ஆனது. பின்னர் 128 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. சஞ்சு சாம்சன் 19 பந்தில் 29 ரன்கள், அபிஷேக் சர்மா 7 பந்தில் 16 ரன்கள், சூர்யகுமார் யாதவ் 14 பந்தில் 29 ரன்கள், ஹர்திக் பாண்ட்யா ஆட்டமிழக்காமல் 16 பந்தில் 39 ரன்கள் அடிக்க 11.5 ஓவரிலேயே இந்தியா வெற்றி பெற்றது.

சூர்யகுமாயர் யாதவ் ஸ்கோரில் 2 பவுண்டரி, 3 சிக்சர்கள் அடங்கும். 3 சிக்சர்கள் அடித்ததன் மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் அடித்த முதல் ஐந்து பேர் பட்டியலில் நுழைந்துள்ளார். இந்த மூன்று சிக்சர்களுடன் 139 சிக்சர்கள் அடித்து 4-வது இடத்தை பிடித்துள்ளார்.

ஜோஸ் பட்லர் 137 சிக்சர்களுடன் ஐந்தாவது இடத்திற்கு பின்தங்கியுள்ளார். ரோகித் சர்மா 205 சிக்சர்களுடன் முதல் இடத்தில் நீடிக்கிறார் மார்ட்டின் கப்தில் 173 சிக்சர்களுடன் 2-வது இடத்திலும், நிக்கோலஸ் பூரன் 144 சிக்சர்களுடன் 3-வது இடத்திலும் நீடிக்கின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com