ஜாகிர்கானை தொடர்ந்து சி.எஸ்.கே. அணியில் இணைந்த மற்றொரு வேகப்பந்து வீச்சாளர்

மோஹித் சர்மா சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 48 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
மோஹித் சர்மா
மோஹித் சர்மா
Published on: 
Summary

2023-ம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் பிளேஆப் சுற்றுக்குக்கூட தகுதி பெறவில்லை.

ஐ.பி.எல். போட்டியில் முன்னணி அணியாக திகழும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ஸ்டீபன் பிளமிங் தனது தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகினார். இதனைத் தொடர்ந்து ஜாகிர்கான் புதிய தலைமை பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மோஹித் சர்மா

பந்து வீச்சு பயிற்சியாளர், பேட்டிங் பயிற்சியாளர் என சப்போர்ட் ஸ்டாஃப்களை ஜாகிர்கான் தேர்வு செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் 38 வயதான மோஹித் சர்மாவை பந்து வீச்சு பயிற்சியாளராக ஜாகிர்கான் தேர்வு செய்யுள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம்.

"ஜாகிர்கான் சப்போர்ட் ஸ்டாஃப்களை இறுதி செய்யும் பணியில் இருக்கிறார். நான் புரிந்துகொண்ட வரையில் பந்துவீச்சு பயிற்சியாளர் பொறுப்பிற்கு மோஹித்தைத் தேர்வு செய்துள்ளதாகத் தெரிகிறது." என சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

2025-ல் ஓய்வு பெற்ற மோஹித் சர்மா

38 வயதான மோஹித் சர்மா 2025 ஐ.பி.எல். சீசனுக்குப் பிறகு அனைத்து வகை கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வு பெற்றார். இவர் இந்திய அணிக்காக 8 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். சி.எஸ்.கே. அணிக்காக 48 போட்டிகளில் விளையாடியுள்ளார். சாம்பியன்ஸ் லீக் டி20 (தற்போது இந்த தொடர் நடத்தப்படுவதில்லை) சிஎஸ்கே-வுக்காக 10 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

பேட்டிங் பயிற்சியாளர் யார்?

2027 சீசனுக்கான பேட்டிங் பயிற்சியாளரை ஜாகிர்கான் இன்னும் கண்டறியவில்லை எனத் தெரிகிறது. 2026 சீசன் வரை எரிக் சைமன்ஸ் பந்து வீச்சு பயிற்சியாளராக இருந்து வந்தார். அவருக்குப் பதிலாக மோஹித் சர்மா விரைவில் நியமிக்கப்பட இருக்கிறார்.

ஸ்டீபன் பிளமிங்

2023-ந்தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் சாம்பியன் பட்டம் வென்றது. அதன்பின் தொடர்ந்து மூன்று சீசன்களில் பிளேஆஃப் சுற்றுக்குக்கூட முன்னேற இயலவில்லை. இதனைத் தொடர்ந்து ஸ்டீபன் பிளமிங் தனது தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com