

ஆஸ்திரேலியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டார்க், சமீபத்தில் நடைபெற்ற வங்கதேசத்திற்கு எதிரான 2-வது டெஸ்டில் 10 விக்கெட் வீழ்த்தினார். இதனால் ஐசிசி டெஸ்ட் போட்டிக்கான பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் இந்தியாவின் பும்ராவை பின்னுக்குத் தள்ளி கடந்த ஆகஸ்ட் மாதம் நம்பர் ஒன் இடத்தை பிடித்தார்.
கடந்த மாதம் ஆஸ்திரேலியா தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. 2-வது போட்டியில் தென்ஆப்பிரிக்காவின் மார்கோ யான்சன் 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதனால் தரவரிசையில் ஸ்டார்க்கை பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தை பிடித்தார்.
கேப் டவுனில் நடைபெற்ற 3-வது போட்டியில் யான்சன் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அதேவேளையில் மிட்செல் ஸ்டார்க் 9 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதன்மூலம் மிட்செல் ஸ்டார்க் மீண்டும் முதல் இடத்தை பிடித்துள்ளார்.
மார்கே யான்சன் 2-வது இடத்திற்கு சரிந்துள்ளார். நியூசிலாந்து வீரர் மாட் ஹென்ரி 2-வது இடத்தில் இருந்து 3-வது இடத்திற்கு பின்தங்கினார். இங்கிலாந்தைச் சேர்ந்த ஒல்லி ராபின்சன் 4-வது இடத்திலும், இந்தியாவின் பும்ரா 5-வது இடத்திலும் உள்ளனர். தென்ஆப்பிரிக்கா சுழற்பந்து வீச்சாளர் ஹார்மர் 9 இடங்கள் முன்னேறி 7-வது இடத்தை பிடித்துள்ளார்.
முதல் 10 இடங்களில் நான்கு இடங்களை ஆஸ்திரேலியா வீரர்கள் பிடித்துள்ளனர். 3 தென்ஆப்பிரிக்கா வீரர்களும் இந்தியா, நியூசிலாந்து இங்கிலாந்தை சேர்ந்த தலா ஒரு வீரர்களும் இடம் பிடித்துள்ளனர்.