ஐபிஎல் 2027: சிஎஸ்கே அணியில் இணைந்த லியாம் லிவிங்ஸ்டன், ஜேக் எட்வர்ட்ஸ்

ஐபிஎல் 2027 சீசனுக்கான மினி ஏலம் விரைவில் நடைபெற இருக்கிறது.
liam livingstone
Published on: 
Summary

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் லியாம் லிவிங்ஸ்டன், ஜேக் எட்வர்ட்ஸ் ஆகியோர் இணைந்துள்ளனர் என சிஎஸ்கே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

ஐ.பி.எல். கிரிக்கெட் 2027 சீசனுக்கான ஏலம் டிசம்பர் மாதம் 16-ம் தேதி கோவாவில் நடைபெற இருக்கிறது. இதற்குமுன் தக்கவைத்துக் கொண்ட வீரர்கள், விடுவிக்கப்பட்ட வீரர்கள் விவரங்களை வெளியிடவேண்டும் என்றும், வரும் 15-ம் தேதி கடைசி நாள் என காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டது. இந்தக் காலக்கெடு நவம்பர் 17-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

சிஎஸ்கேவில் லியாம் லிவிங்ஸ்டன்

இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் லியாம் லிவிங்ஸ்டன், ஜேக் எட்வர்ட்ஸ் ஆகியோர் இணைந்துள்ளனர் என சிஎஸ்கே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

லியாம் லிவிங்ஸ்டன், ஜேக் எட்வர்ட்ஸ் ஆகிய இருவரும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் விளையாடி வந்தார்கள். தற்போது இரு வீரர்களும் சிஎஸ்கே அணிக்கு மாறியுள்ளார்கள்.

விரைவில் மினி ஏலம்

ஐபிஎல் 2027 சீசனுக்காக டிரேடிங் முறையில் இந்த இரண்டு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். விரைவில் மினி ஏலம் நடைபெற இருக்கிறது.

லியாம் லிவிங்ஸ்டன், ஜேக் எட்வர்ட்ஸ் முறையே ரூ.6 கோடி மற்றும் ரூ.3 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளனர். கலீல் அகமது மற்றும் நாதன் எல்லீஸ் முறையே ரூ.4.8 கோடி, ரூ.2கோடிக்கு விற்கப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்தைச் சேர்ந்த ஆல்-ரவுண்டர் லியாம் லிவிங்ஸ்டன் 100 சர்வதேச போட்டிகளில் 1,500-க்கும் அதிகமான ரன்கள் குவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் 51 போட்டிகளில் 1000 ரன்களுக்கும் அதிகமாக, 155 ஸ்டிரைக் ரேட்டில் விளையாடியுள்ளார்.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆல்-ரவுண்டர் ஜேக் எட்வர்ட்ஸ் டி20 கிரிக்கெட்டில் 865 ரன்கள், 58 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.

X