கே.எல். ராகுல் வெளியேறுகிறாரா? டெல்லி கேப்பிட்டல்ஸ் உரிமையாளர் அளித்த பதில்..!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியானது.
KL Rahul
கே.எல். ராகுல்
Published on

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விக்கெட் கீப்பரும், பேட்ஸ்மேனுமான கே.எல். ராகுல் விளையாடி வருகிறார். இவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு Trade செய்யப்பட இருப்பதாக செய்தி வெளியானது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ரகானே தலைமையில் 2026-ல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. அடுத்த சீசனில் ரகனே விளையாடுவாரா? என்பது சந்தேகம்தான்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

இதனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் திறமையுடன் சிறந்த பேட்ஸ்மேனை Trade செய்ய ஆர்வமாக உள்ளது. ஹர்திக் பாண்ட்யாவை Trade செய்ய விருப்பம் தெரிவித்தது. இதற்கிடையே கே.எல். ராகுலை Trade செய்ய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முயற்சி செய்து வருவதாக செய்தி வெளியானது.

இந்த நிலையில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான பார்த் ஜிண்டால் இந்த செய்தியை மறுத்துள்ளார். இது தொடர்பாக பார்த் ஜிண்டால எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவியில் கூறியிருப்பதாவது:-

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு கே.எல். ராகுல் ஒரு மிக முக்கியமான மற்றும் நம்பிக்கைக்குரிய வீரர். எனக்குத் தெரிந்த மிகச் சிறந்த மனிதர்களில் ஒருவரான இவர், எப்போதும் தன்னைவிட அணிக்குத்தான் முன்னுரிமை அளிப்பார். நாங்கள் இன்னும் சாதிக்க வேண்டியவை நிறைய உள்ளன. டெல்லிக்கு பெருமை சேர்க்கும் வகையில் நாங்கள் இணைந்து கடுமையாக உழைப்போம்.

இவ்வாறு பார்த் ஜிண்டால் குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com