அதிக முறை 5 விக்கெட்: டாப் 5 பட்டியலில் இடம்பெற்ற ஜோஷ் ஹேசில்வுட்

ஆஸ்திரேலியாவின் ஹேசில்வுட் இரண்டாவது இன்னிங்சில் 6 விக்கெட் வீழ்த்தினார்.
josh hazlewood
Published on: 
Summary

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக முறை 5 விக்கெட் வீழ்த்திய டாப் 5 பந்துவீச்சாளர்களின் பட்டியலில் ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் இடம்பிடித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணி 214 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அத்துடன், டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் ஹேசில்வுட் இரண்டாவது இன்னிங்சில் 6 விக்கெட் வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்டார். இதன்மூலம் அதிகமாக 5 விக்கெட்டுகள் எடுத்துள்ள வேகப்பந்து வீச்சாளர்கள் வரிசையில் டாப் 5 பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.

இந்தப் பட்டியலில் முதலிடத்தில் மிட்செல் ஸ்டார்க் இருக்கிறார்.

அதிக முறை 5 விக்கெட்டுகள் எடுத்தவர்களில் டாப் 5 பட்டியல்

மிட்செல் ஸ்டார்க்: 19 முறை

ககிசோ ரபாடா: 17 முறை

ஜஸ்பிரீத் பும்ரா: 16 முறை

ஜோஷ் ஹேசில்வுட்: 15 முறை

பாட் கம்மின்ஸ்: 14 முறை

X

Maalai Malar
www.maalaimalar.com