நடப்பு ஐ.பி.எல். தொடரில் அதிவேக அரைசதம்: சாதனை படைத்த ஜேக் பிரேசர்

ஐதரபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஜேக் பிரேசர் மெக்குர்க் 15 பந்தில் அரைசதம் அடித்தார்.டெல்லி அணிக்காக அதிவேக அரைசதம் அடித்த வீரராக மெக்குர்க் சாதனை படைத்துள்ளார்.
நடப்பு ஐ.பி.எல். தொடரில் அதிவேக அரைசதம்: சாதனை படைத்த ஜேக் பிரேசர்
Published on

புதுடெல்லி:

ஐ.பி.எல் தொடரில் டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி மைதானத்தில் நேற்று நடந்த ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின.

முதலில் பேட் செய்த ஐதராபாத் 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 266 ரன்கள் குவித்தது. டிராவிஸ் ஹெட் 89 ரன்கள் அடித்தார். தொடர்ந்து ஆடிய டெல்லி அணி 19.1 ஓவரில் 199 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் ஐதராபாத் அணி 67 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டெல்லி சார்பில் ஜேக் பிரேசர்-மெக்குர்க் 18 பந்தில் 65 ரன்கள் குவித்தார்.

இந்நிலையில், ஜேக் பிரேசர் மெக்குர்க் இந்த ஆட்டத்தில் 15 பந்தில் அரைசதமடித்து அசத்தினார். இதன்மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் டெல்லி அணிக்காக (பந்துகள் அடிப்படையில்) அதிவேக அரைசதம் அடித்த வீரராக மெக்குர்க் சாதனை படைத்துள்ளார். நடப்பு ஐ.பி.எல் தொடரில் அதிவேக அரைசதம் அடித்த வீரராகவும் அவர் சாதனை படைத்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com