ஒரு ஆண்டில் அதிக ரன்கள்: விராட் கோலி சாதனையை முறியடித்த இஷான் கிஷன்

சதமடித்த ஷ்ரேயஸ் அய்யருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
ishan kishan
Published on: 
Summary

டி20 கிரிக்கெட் போட்டிகளில் ஒரு காலண்டர் ஆண்டில் அதிக ரன்கள் குவித்தவர் என்ற சாதனையை இஷான் கிஷன் படைத்தார்.

வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

முதலில் நடந்த ஒருநாள் போட்டியில் இந்திய அணி 2-1 என தொடரைக் கைப்பற்றியது.

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தியா அபாரம்

முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 171 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அடுத்து ஆடிய இந்தியா 14.4 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 172 ரன்கள் எடுத்து வென்றது.

சதமடித்த ஷ்ரேயஸ் அய்யருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

ஒரு ஆண்டில் அதிக ரன்

இந்நிலையில், இந்தப் போட்டியில் 37 ரன் எடுத்த இஷான் கிஷன், விராட் கோலியின் 10 ஆண்டுகால சாதனையை முறியடித்தார்.

டி20 போட்டிகளில் ஒரு காலண்டர் ஆண்டில் அதிக ரன்கள் குவித்தவர் என்ற சாதனையை இஷான் கிஷன் படைத்துள்ளார்.

கடந்த 2026-ம் ஆண்டு டி20 போட்டிகளில் விராட் கோலி 1,614 ரன்கள் குவித்திருந்தார். அதனை முறியடித்துள்ள இஷான் கிஷன் 1644 ரன்கள் குவித்து புதிய சாதனை படைத்தார்.

நடப்பு ஆண்டில் 45 இன்னிங்ஸ்களில் விளையாடிய இஷான் கிஷன் ஒரு சதம் மற்றும் 13 அரை சதங்கள் உள்பட 1,644 ரன்கள் எடுத்துள்ளார்.

ஒரு ஆண்டில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர்கள்

1,644 ரன்கள் - இஷான் கிஷன் (2026)

1,614 ரன்கள் விராட் கோலி (2016)

1,602 ரன்கள் - அபிஷேக் சர்மா (2025)

1,502 ரன்கள் சூர்யகுமார் யாதவ் (2022)

X

Maalai Malar
www.maalaimalar.com