

ஐபிஎல் 2026 கிரிக்கெட் சீசன் கடந்த மார்ச் மாதம் இறதியில் தொடங்கியது. மே மாதம் வரை நடைபெற்ற இந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி ஆர்.சி.பி. 2-வது முறையாக தொடர்ந்து சாம்பியன் பட்டம் வென்றது. இதில் 10 அணிகள் பங்கேற்று விளையாடின.
ஒவ்வொரு அணிகளும் 14 போட்டிகளில் விளையாட வேண்டும். புள்ளிகள் பட்டியலில் முதல் நான்கு இடங்கள் பிடிக்கும் அணிகள் பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறும். அதில் குவாலிபையர்1, எலிமினேட்டர், குவாலிபையர்2 போட்டிகள் நடக்கும். அதன்பின் இறுதிப் போட்டி நடைபெறும்.
ஒவ்வொரு போட்டியையும் நேரிலும், டி.வி.யிலும், டிஜிட்டல் பிளாட்பாரத்திலும் கோடிக்கணக்கான ரசிகர்கள் பார்த்து ரசித்தனர். இந்த நிலையில் ஒட்டுமொத்த தொடரையும் 1.2 பில்லியன் (120 கோடி) ரசிகர்கள் டி.வி. மூலமாகவும், டிஜிட்டல் பிளாட்பாரம் மூலமாக பார்த்து ரசித்துள்ளது. இதற்கு முன்னதாக எந்தவொரு சீசனையும் இந்த அளவிற்கு ரசிகரக்ள் பார்த்தது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
புள்ளிகள் பட்டியலில் ஆர்சிபி, குஜராத் டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் முதல் நான்கு இடங்களை பிடித்தன.