சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் கைகோர்த்த Vi நிறுவனம்

கடந்த முறை ஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் கடைசி இடத்தை பிடித்தது.இந்த முறை சிஎஸ்கே மற்ற அணிகளுக்கு கடும் சவாலாக விளங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் கைகோர்த்த Vi நிறுவனம்
Published on

ஐ.பி.எல். 2026 சீசன் வருகிற 28-ந்தேதி தொடங்க இருக்கிறது. இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு அணியும் முயற்சி முகாமை ஏற்பாடு செய்துள்ளது. வீரர்கள் முகாமில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றன.

அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் எம்.எஸ். தோனியும், பயிற்சி முகாமில் கலந்து கொண்டு தீவிர பேட்டிங் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

கடந்த முறை ஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் கடைசி இடத்தை பிடித்தது. தற்போது ருதுராஜ் கெய்க்வாட், ஆயுஷ் மாத்ரே, சஞ்சு சாம்சன், பிரேவிஸ், ஷிவம் துபே போன்ற நட்சத்திர பேட்ஸ்மேன்கள் உள்ளனர். இதனால் சிஎஸ்கே மற்ற அணிகளுக்கு கடும் சவாலாக விளங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் Communications Partner ஆக Vi நிறுவனம் இணைந்தது. அடுத்த 3 வருடங்களுக்கு இந்த ஒப்பந்தம் அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைவதாகவும், பயனர்களுக்கு நல்ல அனுபவங்கள் கிடைக்கும் எனவும் Vi நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com