திமுக கூட்டணியை ஆதரித்து தமிமுன் அன்சாரி பிரசாரம்

தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியை ஆதரித்து தமிமுன் அன்சாரி பிரசாரம் செய்கிறார்.
தமிமுன் அன்சாரி
தமிமுன் அன்சாரி
Published on

சென்னை:

சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு மனிதநேய ஜனநாயக கட்சி ஆதரவு தெரிவித்து இருந்தது.

மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான தமிமுன் அன்சாரி தி.மு.க. தலைமையிலான மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நாகப்பட்டினத்தில் நேற்று பிரசாரத்தை தொடங்கினார்.

சிதம்பரம், காட்டு மன்னார்குடி, பன்ருட்டி ஆகிய இடங்களில் இன்று வாக்கு சேகரிக்கிறார்.

நாளை (28-ந் தேதி) மற்றும் 29-ந் தேதிகளில் தமிமுன் அன்சாரி சென்னையில் பிரசாரம் செய்து தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.

30-ந் தேதி திருச்சியிலும், 31-ந் தேதி திருவாரூர், மன்னார்குடி, பாப நாசத்திலும், ஏப்ரல் 2-ந் தேதி நெல்லையிலும், 3 மற்றும் 4-ந் தேதிகளில் கோவையிலும் அவர் பிரசாரம் செய்கிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com