இலவச கியாஸ் சிலிண்டரில் பிரியாணி சமைத்து சாப்பிடலாம் - மதுரையில் நடிகை நமீதா பிரசாரம்

தாமரைக்கு வாக்களித்தால் ஆண்டுக்கு 6 கியாஸ் சிலிண்டர் இலவசமாக கிடைக்கும் என மதுரையில் நடிகை நமீதா பிரசாரம் செய்தார்.
நடிகை நமீதா
நடிகை நமீதா
Published on

மதுரை:

தமிழகத்தில் அ.தி. மு.க. கூட்டணியில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து நடிகை நமீதா பிரச்சாரம் செய்து வருகிறார். மதுரை வடக்கு தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் டாக்டர் சரவணனை ஆதரித்து நமீதா பிரச்சாரம் மேற்கொண்டார் வீதி வீதியாக திறந்த வேனில் சென்றார். அப்போது அவர் பேசியதாவது:-

பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் டாக்டர் சரவணன் தனது அறக்கட்டளை மூலம் ஏழை, எளிய மக்களுக்கு 20 ஆண்டுகளாக இலவசமாக மருத்துவ சேவை செய்து வருகிறார். பல அறுவை சிகிச்சைகளையும் கட்டணமின்றி செய்து கொடுத்துள்ளார். ஒன்றுமில்லாத தி.மு.க.வில் இருந்தபோது சரவணன் பல சேவைகளை செய்துள்ளார்.

தற்போது அவர் பா.ஜ.க.வில் இணைந்து இருப்பதால் இன்னும் அதிகமான ஏழை எளிய மக்களுக்கு சேவைகளை செய்வார். மாநிலத்திலும் மத்தியிலும் இணக்கமான ஆட்சி இருப்பதால்தான் தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்கள் கிடைத்து வருகிறது. மத்தியில் பிரதமர் மோடி நல்லாட்சி நடத்தி வருகிறார். அவரின் திட்டங்கள் கிடைக்க அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும். எனவே நீங்கள் மதுரையில் தாமரையை மலர செய்யுங்கள் மச்சான்ஸ்...

தாமரைக்கு வாக்களித்தால் ஆண்டுக்கு 6 கியாஸ் சிலிண்டர் இலவசமாக கிடைக்கும். வாஷிங்மெஷின், இலவச கேபிள் இணைப்பு வழங்கப்படும். இலவச கியாஸ் சிலிண்டர் மூலம் வீட்டில் இருக்கும் பெண்கள் பிரியாணி சமைத்து சாப்பிட்டுக் கொண்டே கேபிளில் நாடகம் பார்க்கலாம். என்று தனக்குரிய பாணியில் நமீதா பிரசசாரம் செய்தார்.

இவரது பிரசாரத்தை பொதுமக்கள் ஆர்வத்துடன் கேட்டு ரசித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com