அமைச்சர் சி.வி.சண்முகம் உள்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு

அமைச்சர் சி.வி.சண்முகம் பிரசாரம் மேற்கொண்டு பொதுமக்களிடம் வாக்கு சேகரிக்கும்போது அவருக்கு ஆரத்தி எடுத்த பெண்களுக்கு அன்பளிப்பாக பணம் வழங்கப்பட்டது. இதுகுறித்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியது.
அமைச்சர் சிவி சண்முகம்
அமைச்சர் சிவி சண்முகம்
Published on

விழுப்புரம்:

விழுப்புரம் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் வேட்பாளராக போட்டியிடும் அமைச்சர் சி.வி.சண்முகம் கடந்த 31-ந் தேதியன்று விழுப்புரம் நகர பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவர் வண்டிமேடு, அலமேலுபுரம் பகுதியில் பிரசாரம் மேற்கொண்டு பொதுமக்களிடம் வாக்கு சேகரிக்கும்போது அவருக்கு ஆரத்தி எடுத்த பெண்களுக்கு அன்பளிப்பாக பணம் வழங்கப்பட்டது. இதுகுறித்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியது.

இதுபற்றி விழுப்புரம் சட்டமன்ற தொகுதி தேர்தல் பறக்கும் படை அலுவலர் விழுப்புரம் மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன்பேரில் அமைச்சர் சி.வி.சண்முகம், அ.தி.மு.க. நகர பாசறை செயலாளர் கிருஷ்ணன் மற்றும் ஆரத்தி எடுத்த பெயர் விலாசம் தெரியாத பெண்கள் மீது அன்பளிப்பு வழங்குதல், வேட்பாளருக்கு ஆதரவாக விளம்பரப்படுத்துதல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com