

திருநெல்வேலி:
தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று பலத்த பாதுகாப்புடன் எண்ணப்பட்டன.
திருநெல்வேலியில் பாஜக சார்பில் போட்டியிட்ட நயினார் நாகேந்திரன் தொடர்ந்து முன்னிலை பெற்று வந்தார்.
இறுதியில், திருநெல்வேலியில் நயினார் நாகேந்திரன் 92,282 வாக்குகள் பெற்றார். திமுக வேட்பாளர் லட்சுமணன் 69,175 வாக்குகள் பெற்றார். இதன்மூலம் 23,107 வாக்குகள் வித்தியாசத்தில் நயினார் நாகேந்திரன் வெற்றி பெற்றார்.