தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது- நடிகை விந்தியா பேச்சு

கடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. தோற்பதற்கு முக்கிய காரணமாக இருந்தது ராசாவின் ஊழல். இந்த முறை தி.மு.க. தோற்க போவதற்கு காரணமாக இருக்க போவது ராசவின் வாய் தான் என்று விந்தியா பேசியுள்ளார்.
அ.தி.மு.க. வேட்பாளர் சேகரை ஆதரித்து நடிகை விந்தியா பிரசாரம் செய்த காட்சி.
அ.தி.மு.க. வேட்பாளர் சேகரை ஆதரித்து நடிகை விந்தியா பிரசாரம் செய்த காட்சி.
Published on

பரமத்திவேலூர்:

பரமத்திவேலூர் சட்டசபை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சேகரை ஆதரித்து நடிகை விந்தியா பரமத்திவேலூர் அருகே பொத்தனூரில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், அனைத்து வணிக நிறுவனங்கள் உள்பட பல்வேறு பிரச்சினைகளில் மக்களை துன்புறுத்தி வருவது தி.மு.க.வினர் மட்டும் தான். தமிழக முதல்-அமைச்சரின் தாயாரை இழிவுபடுத்தி பேசிய தி.மு.க. ஆ.ராசா தமிழக மக்கள் கண்டித்து வருகின்றனர். தி.மு.க.வினர் வெறும் விளம்பரத்தை நம்பியே தேர்தலை சந்திக்கின்றனர். 

கடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. தோற்பதற்கு முக்கிய காரணமாக இருந்தது ராசாவின் ஊழல். இந்த முறை தி.மு.க. தோற்க போவதற்கு காரணமாக இருக்க போவது ராசவின் வாய் தான்.

தி.மு.க ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது. தி.மு.க. வினர் சொன்னது எதையும் செய்யமாட்டார்கள். எனவே மக்கள் சிந்தித்து செயல்பட்டு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைய இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றார். இதில் பொத்தனூர் நகர அ.தி.மு.க. செயலாளர் நாராயணன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com