சதம் அடித்ததும் பல்டி அடித்து கொண்டாடிய ரிஷப் பண்ட்: வைரலாகும் வீடியோ

பெங்களூரு அணிக்கெதிரான ஆட்டத்தில் பண்ட் சதம் விளாசினார்.தான் சதம் அடித்ததை ரிஷப் பண்ட் பல்டி அடித்துக் கொண்டாடினார்.
சதம் அடித்ததும் பல்டி அடித்து கொண்டாடிய ரிஷப் பண்ட்: வைரலாகும் வீடியோ
Published on

லக்னோ:

ஐ.பி.எல். தொடரின் கடைசி லீக் ஆட்டம் லக்னோவில் நேற்றிரவு நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட் செய்த லக்னோ 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 227 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 118 ரன்னும், மிட்செல் மார்ஷ் 67 ரன்னும் அடித்தனர்.

இந்நிலையில், நடப்பு ஐ.பி.எல். தொடரில் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தியதால் பெரும் விமர்சனத்திற்கு உள்ளான ரிஷப் பண்ட் இந்த ஆட்டத்தில் சதமடித்து அனைத்திற்கும் பதிலடி கொடுத்துள்ளார்.

மேலும் தான் சதமடித்ததை ரிஷப் பண்ட் பல்டி அடித்து கொண்டாடினார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com