சஞ்சு சாம்சன் அரை சதம்: ராஜஸ்தான் ராயல்ஸ் 10 ஓவரில் 118/3

ஐதராபாத் அணியின் இஷான் கிஷன் சதமடித்து அசத்தினார்.287 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கோடு ராஜஸ்தான் ஆடி வருகிறது.
சஞ்சு சாம்சன் அரை சதம்: ராஜஸ்தான் ராயல்ஸ் 10 ஓவரில் 118/3
Published on

ஐதராபாத்:

ஐபிஎல் 2025 சீசனின் 2வது போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ரியான் பராக் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

அதன்படி, முதலில் ஆடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 286 ரன்களைக் குவித்தது. இஷான் கிஷன் 106 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். சிறப்பாக அடிய டிராவிஸ் ஹெட் அரை சதமடித்து 67 ரன்னில் அவுட்டானார்.

இதையடுத்து, 287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் களமிறங்கியது. முதலில் அதிரடியாக ஆட்டத்தை தொடங்கிய அந்த அணியின் 3 விக்கெட்டுகள் விரைவில் வீழ்ந்தன.

பவர்பிளே முடிவில் ராஜஸ்தான் 3 விக்கெட்டுக்கு 77 ரன்கள் எடுத்தது.

4வது விக்கெட்டுக்கு சஞ்சு சாம்சன்-துருவ் ஜுரல் ஜோடி பொறுப்புடன் ஆடியது. சஞ்சு சாம்சன் அரை சதம் கடந்தார்.

ராஜஸ்தான் அணி 10 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 118 ரன்கள் எடுத்துள்ளது. துருவ் ஜுரல்45 ரன் எடுத்து ஆடி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com