ஐபிஎல் 2018 - சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய அட்டவணை

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சென்னை போட்டிகள் புனேவிற்கு மாறியுள்ளன. அதன் விவரத்தை கீழே காண்போம். #IPL2018 #CSK
ஐபிஎல் 2018 - சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய அட்டவணை
Published on

தற்போது தமிழ்நாட்டில் காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இதனால் போட்டியை சென்னையில் நடத்தக்கூடாது என்ற கோரிக்கை எழுந்தது. ஆனால் பலத்த பாதுகாப்புடன் கொல்கத்தாவிற்கு எதிரான முதல் போட்டி நடைபெற்றது.

மைதானத்திற்கு வெளியே நடைபெற்ற போராட்டம் லத்தி சார்ஜ், போலீஸ் மீது தாக்குதலாக மாறியது. பின்னர் தமிழக அரசு பாதுகாப்பு வழங்க முடியாது என்று கூறியதால் மீதமுள்ள 6 போட்டிகளும் புனேவிற்கு மாற்றப்பட்டுள்ளது.

புனேயிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாட இருக்கும் போட்டிகளின் விவரங்கள் பின்வருமாறு:-

ஏப்ரல் 20 - சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ்

ஏப்ரல் 28 - சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ்

ஏப்ரல் 30 - சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி டேர்டெவில்ஸ்

மே 5- சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

மே 13 - சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத்

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com