போடிநாயக்கனூர் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் பின்னடைவு

போடிநாயக்கனூர் தொகுதியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை விட திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் 124 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
ஓ.பன்னீர்செல்வம் பின்னடைவு
ஓ.பன்னீர்செல்வம் பின்னடைவு
Published on

தேனி:

தமிழக சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் பலத்த பாதுகாப்புடன் எண்ணப்பட்டு வருகின்றன. தேனி மாவட்டம் போடிநாயக்கனூர்  சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திமுக சார்பில் தங்க தமிழ்ச்செல்வன், அமமுக சார்பில் முத்துச்சாமி, மக்கள் நீதி மய்யம் சார்பில் கணேஷ் குமார், நாம் தமிழர் கட்சி சார்பில் பிரேம் சந்தர் ஆகியோர் களத்தில் உள்ளனர்.

வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே தங்க தமிழ்ச்செல்வன்,  ஓ.பன்னீர்செல்வம் மாறிமாறி முன்னிலை வகித்தனர். தற்போதைய நிலவரப்படி தங்க தமிழ்ச்செல்வன் 124 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். தங்க தமிழ்ச்செல்வன் 6538 வாக்குகளும்  ஓ.பன்னீர்செல்வம் 6414 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com