

ஐபிஎல் 2027 சீசனுக்கான மினி ஏலம் அடுத்த மாதம் 16-ந்தேதி கோவாவில் நடைபெற இருக்கிறது. இதற்கு முன்னதாக இன்றுடன் அனைத்து அணிகளும் தக்கவைக்கும் மற்றும் விடுவிக்கும் வீரர்கள் பெயர்களை தெரிவிக்க வேண்டும் என்று ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் முதல் அணியாக விடுவிக்கப்பட்ட வீரர்கள் பட்டியலை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி விடுவித்துள்ளது.
முன்னணி வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டார்க், நிதிஷ் ராணா, அபிஷேக் பொரேல், பதுன் நிசாங்காக, பென் டக்கெட், கருண் நாயர், சஹில் பராக், துஷ்மந்தா சமீரா, ரேஹகன் அகமது, அஜய் மண்டல் ஆகியோரை விடுவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க், சர்வதேச போட்டியில் விளையாட கவனம் செலுத்த இருப்பதால் ஒர்க் லோடு காரணமாக விலகு குறித்து அணி நிர்வாகத்திடம் பேசியதாக தகவல் வெளியானது. இதனால் அவரை விடுவித்திருக்கலாம்.