மயங்க் அகர்வாலை கலாய்த்த ரோகித் சர்மா- வைரலாகும் வீடியோ

அகர்வால் விக்கெட் வீழ்த்திய கொல்கத்தா வீரர் ராணா அகர்வால் முகத்து முன்னாள் பிளையிங் கிஸ் கொடுத்து கேலி செய்வார்.மயங்க அகர்வாலுக்கு ரோகித் சர்மா பிளையிங் கிஸ் கொடுத்து கலாய்த்த புகைப்படம் வைராலாகி வருகிறது.
மயங்க் அகர்வாலை கலாய்த்த ரோகித் சர்மா- வைரலாகும் வீடியோ
Published on: 

ஐபிஎல் 2024 தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. நாளைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இரு அணி வீரர்களும் பயிற்சியில் ஈடுப்பட்ட போது மும்பை அணி வீரர் ரோகித் சர்மாவும் ஐதராபாத் அணி வீரர் மயங்க் அகர்வாலும் சந்தித்து கொண்டனர். அப்போது மயங்க அகர்வாலுக்கு ரோகித் சர்மா பிளையிங் கிஸ் கொடுத்து கலாய்த்தார்.

எதற்காக ரோகித் அப்படி செய்தார் என்றால், ஐபிஎல் தொடரின் 3-வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 4 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியின் போது ஐதராபாத் அணி வீரர் அகர்வால் விக்கெட் வீழ்த்திய கொல்கத்தா வீரர் ராணா அகர்வால் முகத்து முன்னாள் பிளையிங் கிஸ் கொடுத்து கேலி செய்வார். அதனை வைத்து ரோகித் மயங்க் அகர்வாலை கிண்டல் செய்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் வைரலாகி வருகிறது.

மயங்க் அகர்வாலை கிண்டல் செய்த ராணாவுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 60 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com