ஐ.பி.எல். 2024 - சதம் விளாசிய சுனில் நரைன்.. 223 ரன்களை குவித்தது கொல்கத்தா

கொல்கத்தா அணியின் சுனில் நரைன் சதம் அடித்தார். ஆவேஷ் கான் இரண்டு விக்கெட் வீழ்த்தினார்.
ஐ.பி.எல். 2024 - சதம் விளாசிய சுனில் நரைன்.. 223 ரன்களை குவித்தது கொல்கத்தா
Published on

ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.

அதன்படி பேட்டிங்கை துவங்கிய கொல்கத்தா அணிக்கு துவக்க வீரர் பில் சால்ட் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். இவருடன் களமிறங்கிய சுனில் நரைன் சிறப்பாக ஆடினார். அடுத்து வந்த ஆங்ரிஷ் ரகுவன்ஷி 18 பந்துகளில் 30 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். கேப்டன் ஸ்ரேயஸ் அய்யர் 11 ரன்களில் நடையை கட்டினார்.

பிறகு நரைனுடன் இணைந்து விளையாடிய ஆண்ட்ரே ரசல் ரன் குவிப்பில் ஈடுபட்டார். போட்டி முடிவில் கொல்கத்தா அணி 6 விக்கெட்டுகளை இழந்து 223 ரன்களை குவித்தது. சிறப்பாக ஆடி சதம் அடித்த சுனில் நரைன் 56 பந்துகளில் 109 ரன்களை குவித்தார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் சார்பில் ஆவேஷ் கான் மற்றும் குல்தீப் சென் தலா 2 விக்கெட்டுகளையும், போல்ட் மற்றும் சாஹல் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com