ஹாட்ரிக் வெற்றியுடன் புள்ளிகள் பட்டியலில் முதல் இடம் வகிக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

கொல்கத்தாவின் நெட் ரன்ரேட் 2.518 ஆக உள்ளது.ராஜஸ்தான் ராயல்ஸ் 1.249 ரன் ரேட் வைத்துள்ளது.
ஹாட்ரிக் வெற்றியுடன் புள்ளிகள் பட்டியலில் முதல் இடம் வகிக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
Published on

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் நேற்று டெல்லி கேப்பிட்டல்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்றது.

முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 272 ரன்கள் குவித்தது. பின்னர் 273 என்ற கடுமையான இலக்கை நோக்கி பேட்டிங் செய்த டெல்லி அணி 166 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 106 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் தொடர்ந்து மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் முதல் இடம் வகிக்கிறது கொல்கத்தா நைட் ரைடர்ஸ். அதுவும் நெட் ரன் ரேட் 2.518 என்ற அசுர பலத்துடன் முதலிடத்தில் வகிக்கிறது.

அதேபோல் ஹாட்ரிக் வெற்றி பெற்றுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 1.249 ரன் ரேட் உடன் இரண்டாம் இடம் வகிக்கிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் மூன்று போட்டிகளில் இரண்டில் வெற்றி பெற்று 0.976 ரன் ரேட் உடன் 3-வது இடத்தையும் லக்னோ மூன்ற போட்டியில் இரண்டில் வெற்றி பெற்று 0.483 ரன் ரேட் உடன் 4-வது இடத்தையும் குஜராத் டைட்டன்ஸ் மூன்று போட்டியில் இரண்டில் வெற்றி பெற்று மைனஸ் 0.738 ரன் ரேட் உடன் ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளன.

சன்ரைசர்ஸ் ஐதராபாத், பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் தலா ஒரு வெற்றிகள் மூலம் முறையே ஆறு முதல் ஒன்பதாவது இடத்தை பிடித்துள்ளன. மும்பை இந்தியன்ஸ் 3 போட்டிகளில் தோல்வி அடைந்து கடைசி இடத்தை வகிக்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com